Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 11, 2016

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு.

'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்று நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கன்றுகள் வளர்ந்துள்ளன.
தோட்டக்கலைத் துறையினர் மழைக் காலம் மற்றும் சீசன் முடிந்த பின், நாற்றுகளை விவசாயிகளிடம் கொடுக்கின்றனர். அதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல்போய் விடுகிறது.

பள்ளிகளில் பழத்தோட்டம் :

இந்த நிலையில், தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி