Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 13, 2016

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு :
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

8 comments :

  1. முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 4 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

    முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

    கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.

    8973975233

    ..... நீங்களும் இணையுங்கள்

    ReplyDelete
  2. When will set exam result come?????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி