Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 23, 2016

விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை: நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது - தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு மறுப்பு.

விளை நிலங்களை அங்கீகாரமில் லாத வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்தது.தமிழகம் முழுவதும் உள்ள விளை நிலங்களைஅங்கீகார மில்லாத வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தால் அந்த மனைகளையோ, அவற்றில் உள்ள கட்டிடங்களையோ பத்திர மாக பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு உத்தர விட்டது.
அதன்படி, சென்னையில் பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ), பிற மாவட்டங்களில் நகர ஊரமைப்பு இயக்குநரகத்தின் (டிடிசிபி) ஒப்புதல் பெற்றால் மட்டுமே மனை இடங்களைப் பதிவு செய்ய முடியும் என பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் அதிபர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கே.குல சேகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:எங்களது சங்கத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர் களாக உள்ளனர். கடந்த 9-ம் தேதி, விளைநிலங்களில் அங்கீகாரமில்லாமல் உள்ள வீட்டுமனைகளை பதிவு செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு ஸ்தம்பித்துப் போய் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு செய்ய மறுப்பு

இந்த உத்தரவை ஒவ்வொரு சார் பதிவாளரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக்கொண்டு கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்பு வாங்கிய மனைகளைக்கூட தற்போது பதிய மறுக்கின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக வீட்டுமனைகளை வாங்கி அதற்கு பட்டா, சிட்டா அடங்கல் பெற்று வீட்டு வரிகூட செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது இந்த உத்தரவால் மனைகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக கிடக்கும் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிக்கொள்ள எந்தத் தடையும் இல்லை என விதிகள் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் சொந்தமாக வீட்டு மனை வாங்கி அதில் குடியிருக்க வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. பலர் தங்களின் எதிர்காலத்தைக் கருத் தில் கொண்டு வீட்டு மனைகளில் முதலீடு செய்கின்றனர். வெள்ள அபாயம் மற்றும் விளை நிலங்களைக் காக்க வேண்டு மென்பதற்காக மட்டுமே தற் போது உயர் நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப்பிறப் பித்துள்ளது.எனவே இந்த வழக்கில் எங்களையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். கடந்த 9-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கோரி யிருந்தார்.

முன்னதாக இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசா ரிக்கக் கோரி மனுதாரரின் வழக்கறிஞர் ஜீனசேனன், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக எந்த உத்தரவும் தற்போது பிறப் பிக்க முடியாது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவையும் மாற்றி யமைக்க முடியாது. இந்தப் பிரச்சினை குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை பிரதான வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும்’’ எனக் கூறி அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி