sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Sep 14, 2016

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் - அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு.

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் - அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வுஇந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.அத்தேர்வை தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலிலியோ அறிவியல் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்க உள்ளோம். ஆகவேஇத்தேர்வை பற்றிய விவரங்களை தாங்கள் பிரசுரித்தால் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இத்தேர்வில் பங்கேற்க..6 முதல் 11 வகுப்பு வரை உள்ள மாணாக்கர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.50 மாணாக்கர்களுக்கு மேல் பங்கேற்றால் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.தேர்வுக் கட்டணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 50 ரூபாயும் ( குறைந்தபட்சம் 50 மாணாக்கர்கள் ஒரே பள்ளியில் இருந்து பங்கேற்றால் மட்டுமே 50 ரூ கட்டணம்) தனியார் பள்ளிகள் 100 ரூபாயும் செலுத்த வேண்டும்.

அதற்கு ஈடாக விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மூலம் இரண்டு புத்தகங்கள் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்கப்படும்.தேர்வானது 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும், 9முதல் 11வரை இரண்டாவது பிரிவாகவும் நடைபெறும்.தேர்வினால் மாணாக்கர்களுக்கு ஏற்படும் பயன்கள்:6 முதல் 11ம் வகுப்பு வரை பங்கேற்கும் மாணாக்கர்களில் தமிழக அளவில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 20 மாணாக்கர்கள் வீதமாக 120 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு இரண்டு நாட்கள் அறிவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெறும் . அதில் இந்திய அளவில் சிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் , குழுச் செயல்பாடுகள், வினாடி வினா ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்படும்.அந்த 120 மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் வீதம் சிறந்த 18 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

அந்த 18 மாணாக்கர்களில் இருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 2 மாணாக்கர்கள் வீதம் 12 பேர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் சார் நிகழ்வுக்கு அழைக்கப்படுவார்கள்.அந்த நிகழ்வில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களில் ஒவ்வொரு பிரிவில் உள்ள மாணாக்கர்களுக்கும் முதல் பரிசாக ரூ.10000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, இவர்கள் இந்திய அரசின் குடியரசுத் தலைவரால் கெளரவிக்கப்படுவார்கள்

தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 13, 2016விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30.இத்தேர்வை தமிழக அளவில் கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைக்கிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு - இ மெயில் kannatnsfudt@gmail.com.தேர்வு பற்றிய விவரங்களை www.vvm.org.in என்ற இணையதளத்திலும் பார்வையிடலாம்.

1 comment :

  1. I-SCOPE (INTERNATIONAL SCIENCE COMMUNICATION ONLINE PROGRAM FOR ENHANCEMENT)-ONE YEAR
    ஆன்லைனில் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் அறிவியல் பத்திரிக்கையியல் படிப்பு அறிமுகம்
    பெங்களூரில் உள்ள ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்விவள மையம், ஆன்லைன் மூலம்
    ஓராண்டு அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிக்கையியல் சான்றிதல் படிப்பை வழங்குகிறது. இப்படிப்பானது வாழ்க்கைக்கு எதை, எங்கு, எப்படி, எதற்கு கற்கவேண்டும் என்ற நிதர்சனத்தை அறிவியல் பூர்வமாக வழங்க முன்வந்துள்ளது.
    யார் யார் இப்படிப்பை படிக்கலாம்?
    ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முதல், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள்,கல்லூரி பேராசிரியர்கள்,பெற்றோர்கள் என அனைவரும் இந்த படிப்பில் சேரலாம். படிப்பைப் படிக்க குறைந்த பட்சம் 10 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
    அறிவியலின் உண்மைத்தன்மையை எளிமையான முறையில், செய்முறை அனுபவத்துடன் வாழ்கை அனுபவத்தையும் சேர்த்து கற்றுக்கொள்ள, சரியாக புரிந்து படிக்க வாய்ப்பினை வழங்குகிறது ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம்.
    எப்படி கற்பது:
    ஆன்லைன் மூலமாக, பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டில் இருந்தபடியே தொலைநிலைக் கல்வியின் மூலம் படிக்கலாம். வாரம் ஒருமுறை பாடங்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்படும்.
    மதிப்பீடு:
    கற்கும் அளவு , கற்றபின் பயன்பாட்டு செயல்கள் மூலம் மாணவர்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.
    இந்த படிப்பினை வடிவமைத்தவர்கள் மற்றும் வழங்குபவர்கள்:
    விக்யான் பிரச்சார், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ( National council for Science and Technology Communication-NCSTC-DST-GOI) GOOGLE, BRITISH COUNCIL, UGC, IIT, CSIR, NCERT, EDI நிறுவனங்களில் பயிற்சிபெற்றவர்கள், கல்வித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர்கள்.
    பள்ளி மாணவனுக்கு: பலன்:
    குறைந்த வயதுடைய மாணவர்கள் இப்படிப்பினை ஐந்தாம் வகுப்பு முதல் மேற்கொள்ளும் போது, அகில இந்திய நுழைவு தேர்வுகளில் (Talent exams, NCSC, IRIS, IISc, IISER, IIT, NEET) சிறப்பான தகுதியை அடைய இந்த படிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
    கல்வியாளருக்கு / ஆசிரியருக்கு : பலன்:
    தற்போதைய சூழலுக்கு ஏற்ற கல்விமுறையை வடிவமைத்தல், சுற்றுசூழல் சீர்கேடுகளில் இருந்து தம்மையும் தனது பூமியையும் காப்பதற்கான செயல் திட்டங்கள், செயல்வழி கற்றலை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த கற்றல் ( NTSC, STEM, STEAM, INSPIRE,…) முறைக்கு தங்களை தயார்படுத்துதல்.
    படிப்பிற்கான மூலநூல்கள் ( e-Books, Resource materials) செயல் படுத்தும் முறை:
    படிப்புகளுக்கான புத்தகங்கள் PDF, Video முறையில் மட்டுமே ஈமெயில் மூலம் வழங்கப்படும். அச்சடிக்கப்பட்ட புத்தகங்களாக வழங்கப்படமாட்டாது.
    மானிய (Subsidized ) படிப்பு கட்டணம்:ரூ 1000/ ( One thousand only) பதிவுக் கட்டணம் ரூ.500/ கருப்பொருட்கள், நிர்வாக செலவுகள், பாட வல்லுநர் குழு மதிப்பூதியம் மற்றும் ஆன்லைன் சான்றிதல் கட்டணம்ரூ.500/ சலுகை கட்டண விபரம் அறிய ஈமெயில் மூலம் தொடர்புகொள்ளவும். activityeducator@gmail.com http://www.activityeducator.com
    இந்த படிப்பில் விரும்புவோர் 10-05-2017 க்குள் RTGS / NEFT Online-payment மூலம் பணம் செலுத்தவும்
    இந்த தகவலை உங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்
    இந்த பயிற்சி சப்சிடி கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
    Subsidized Course fees: (Apply with the attested ID proof / certificate. Send soft copy to our email: activityeducator@gmail.com
    Category School / College students Educators & Science Communicators Parents, Publics & others
    RTGS / NEFT-Activity Educator, Syndicate bank, Bangalore, C. A/C No: 04191010003450 & IFSC code: SYNB0000419
    பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1000/ (ஆயிரம் மட்டுமே)
    மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கண்ட தேதியில் சேர்ந்து முன்சேர்க்கை கட்டண சலுகைபெற்று பயனடையலாம்
    பயில ஆர்வம் உள்ளவர்கள் இந்த படிப்பில் இணைந்து படிக்கலாம் (தமிழ் / ஆங்கிலவழி)
    LAST DATE 10-05-2017
    Email: tniscope@gmail.com
    ONLINE ADMISSION LINK: https://goo.gl/forms/5ZcLEc1Gwm9bTAN33

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி