Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 23, 2016

மின் வாரிய பணியாளர் தேர்வு முடிவு வெளியாவதுஎப்போது?

மின் வாரியத்தில் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு எழுதிய பட்டதாரிகள், முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் பணி இடங்கள் காலியாக உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உட்பட, 2,175 பணி இடங்களை, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்தது. இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு, அண்ணா பல்கலை மூலம், ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது; இதுவரை, தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.

இது குறித்து, தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: எழுத்து தேர்வு அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில்வெளியிட்டது. ஆனாலும், சட்டசபை தேர்தல் காரணமாக, ஐந்துமாதம் தாமதமாக தேர்வை நடத்தியது. அரசு நிறுவனங்கள், ஊழியர்களை தேர்வு செய்யும் போது, விண்ணப்பித்தவர்கள், பங்கேற்றவர்கள் விபரங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால், மின் வாரியம், அந்த விபரங்களை வெளியிடவில்லை; தேர்வு முடிவையும் வெளியிடவில்லை. இந்த தாமதத்தால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுகிறது. எனவே, தேர்வு முடிவை விரைவாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏ.இ., தேர்வில் ஏமாற்றம் : மின் வாரியம், எலக்ட்ரிகல், சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை நியமிக்க, ஜனவரியில் எழுத்து தேர்வை நடத்தியது. இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, மதிப்பெண் மட்டும் வெளியிட்டது; வழக்கு முடியாததால், மற்ற விபரங்கள் வெளியாகவில்லை.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி