Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 7, 2016

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை திருமணமான மகன்களுக்கும் இனி பொருந்தும் மத்திய அரசு அறிவிப்பு.

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித் துறை அமைச்சகம், மத்திய சட்டத் துறை அமைச்சகத்துடன் விவாதித்து இது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழியர் ஒருவர் பணிக் காலத்தின்போது உயிரிழந்தால் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் இனி திருமணமான மகன்களுக்கும் பணி வழங்கப்படும். இது தொடர்பான மற்ற நிபந்தனைகள்  பூர்த்தியாகும் நிலையில் எவ்வித பிரச்னையும் இன்றி பணி வழங்கப்படும். வருமானம் ஈட்டி வந்தவரை திடீரென இழக்கும் குடும்பத்தினருக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மரணமடைந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கும் அவர்களது தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது நடைமுறையாக உள்ளது. (இருப்பினும், திருமணமான மகனுக்கு இத்தகு வேலைவாய்ப்பு இதுவரை மறுக்கப்பட்டு வந்தது.)
மருத்துவக் காரணங்களுக்காக 55 வயதுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கும் இதுபோல் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. டி பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் இந்த வயது வரம்பு 57 ஆக உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி