Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 23, 2016

இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!

சென்னை உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள் மற்றும், 51 நகராட்சிகளுக்கான வரிகளை, அரசின், இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இ - சேவை மையங்களில், 'ஆன்லைன்' மூலமாக, அரசின் சேவைகள் வழங்கப்படுகின்றன.
அவற்றுடன், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வசிப்பவர்களுக்காக, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.

அதன்படி, அவர்கள், தங்களது சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்றவற்றை, இ - சேவை மையங்கள் மூலமாக செலுத்தலாம். இந்த சேவையை பெற, குறைந்த அளவிலான சேவை கட்டணம் உண்டு. தற்போது, 12 மாநகராட்சி மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட, 51 நகராட்சிகளில், ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன; அதனால், அங்கு வசிப்போர் மட்டும், இவ்வசதியை பெறலாம். மற்ற நகராட்சிகளில், ஆவணப்படுத்தும் பணி நிறைவடைந்ததும், இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி