Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 27, 2016

அழைப்பு விபரங்களை விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்கிறதா ரிலையன்ஸ் ஜியோ ?

தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை தனியார் விளம்பரதாரர்களுடன் ரிலையன்ஸின் ஜியோ பகிர்ந்து கொள்வதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்தியாவின் புகழ்பெற்ற கணினி தகவல் திருட்டு குழுக்களில் ஒன்றான 'அனானிமஸ் இந்தியா' தங்களது வலைப்பூ பதிவு ஒன்றில் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ  செயலியானது, தங்களது வாடிக்கையாளர்களின் அழைப்பு விபரங்களை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் இல்லாமல் 'மேட் -மீ ' என்ற விளம்பரதாரர் ஒருவருடனும் இந்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் அந்த வலைப்பூ தெரிவிக்கிறது.

இதே குழுவின் வலைப்பூவின் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ;பதிவு ஒன்றில் ரிலையன்ஸ் ஜியோ  தகவல் பரிமாற்ற  செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.அதன்மூலம் சங்கேத மொழியில் தகவல்கள் பாதுகாக்கப்படாததால்  எளிதில் திருடு போக வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி