Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 23, 2016

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதனை பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 6 பேரை நியமிக்க மாநில தேர்தல்ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணும் அலுவலர், விரலில் மை வைக்கும் அலுவலர், ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், ஒன்றியகவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பொறுப்பாளர் என ஆறுபேர் நியமிக்கப்பட உள்ளனர்.

 சில ஊராட்சிகளில் பெரிய வார்டில் இரண்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுபோன்ற வார்டு வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அலுவலருடன் 8 பேர் பணியாற்றுவர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதால், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அடையாளம் காணும் அலுவலர், விரல் மை வைக்கும் அலுவலர், கன்ட்ரோல் யூனிட்அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்களாகஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி