Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 29, 2016

TNPSC:நூலகர் - உதவி நூலகர் பணியிடம்: அக்.4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு.

நூலகர்-உதவி நூலகர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (அக்.4) தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பல்வேறு பணிகளில் நூலகர்-உதவி நூலகர் பதவிகளுக்கான 29 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.இந்தப் பதவிகளுக்கான நேர்காணலுக்கு 64 விண்ணப்பதாரர்கள் தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் வரும் 4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 4, 5 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.விண்ணப்பதாரர்கள், நேர்காணலுக்கான அழைப்பாணையை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழ் சரிபார்ப்பு -நேர்காணல் குறித்த தகவல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

1 comment :

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி