Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 31, 2016

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப்போட்டி : தமிழக அரசு அறிக்கை.

மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்படஉள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டு (2016-17) சென்னை மாவட்ட அளவில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 4ம் தேதி சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், இரண்டாம் பரிசாக ரூ.7000ம், மூன்றாம் பரிசாக ரூ.5000ம், சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டிக்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்பெறும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்பெறும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று வரவேண்டும். போட்டி விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் www.tamilvalarchithurai.org என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி