Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 10, 2016

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜிஅறிவிப்பு.

அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு--தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து ஷியா பிரிவுமுஸ்லிம்களால் துக்க தினமாக மொகரம் அனுசரிக்கப்படுகிறது.
அதேவேளையில், ஷியா முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இஸ்லாமியர், மொகரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பிருந்து, தன்னைத்தானே கடவுள் என்று பிரகடணப்படுத்திய ஃபிர்அவ்ன் என்ற மன்னன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா நபியை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.இந்த மொகரம் பிறையின் பத்தாவதுநாள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் மக்களால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் மொகரம் நாள் வரும் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் இன்று அறிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி