Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 19, 2016

பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மார்க் எடுத்தால் மட்டுமே என்.ஐ.டி.யில் இடம்: புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியதொழில்நுட்ப கல்லூரிகளை நடத்தி வருகிறது. இதில், ஐ.ஐ.டி. முதன்மை கல்லூரியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் என்.ஐ.டி. கல்லூரிகள் உள்ளன.நாடு முழுவதும் 31 என்.ஐ.டி. கல்லூரிகள் இருக்கின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு ஜே.இ.இ. என்ற பெயரில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். இதுவரை நுழைவு தேர்வு எழுதும் மாணவர்கள் பொது பிரிவினர் பிளஸ்-2 வில் 70 சதவீத மார்க்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 65 சதவீத மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் இருந்தன.ஆனால், இப்போது இதில், மாற்றத்தை கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த கல்லூரியில் சேர பொது பிரிவினர் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 70 சதவீதமும் மார்க் பெற்று இருக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சிபாரிசுகளை மத்திய இடஒதுக்கீட்டு வாரியத்துக்கு அனுப்பி உள்ளனர். அவர்கள் இறுதி முடிவு எடுத்த பிறகு இது நடைமுறைக்கு வரும்.ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சத்தில் இருந்து 13 லட்சம் மாணவர்கள் வரை ஜே.இ.இ. நுழைவு தேர்வு எழுதுகின்றனர். புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் நுழைவு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 2 லட்சம் வரையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment :

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி