Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 13, 2016

பாரத ஸ்டேட் வங்கியில் 2,428 அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு.

பாரத ஸ்டேட் வங்கி 2,428 அதிகாரிகளை போட்டித் தேர்வு மூலம் நேரடியாக தேர்வுசெய்யும் வகையில் கடந்த மே மாதம் ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வுஆன்லைன் வழியில் கடந்த ஜூலை 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு ஜூலை 31-ல் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இத்தேர்வு செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்தது. இந்த நிலையில், மெயின் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் தேர்வு பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி தனது இணையதளத்தில் (www.sbi.co.in/careers) வெளியிட்டுள்ளது.

தேர்வு பட்டியல் அக்டோபர் 15-21-ம் தேதியிட்ட ‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ்’ பத்திரிகையிலும் வெளியிடப்படும் என்றும் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கும் அதுகுறித்த தகவல் தபால்மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி