Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 6, 2016

5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம்.

மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' கார்டு எடுக்கும் பணி அடுத்த வாரம் துவங்க உள்ளது.அரசின் அனைத்து நலத்திட்டங்கள் பெற 'ஆதார்' கார்டு முக்கியம். தற்போது ஐந்து வயதிற்குமேற்பட்டவர்களுக்கே 'ஆதார்' எண் வழங்கப்படுகிறது.
அடுத்த வாரம் துவக்கம்: தற்போது ஐந்து வயதிற்கு உட்பட்டோருக்கும் 'ஆதார்' கார்டு வழங்கப்பட உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உட்பட எட்டு மாவட்டங்களில் 'ஆதார்' கார்டு எடுப்பதற்கு, 'யுனைடெட் டேட்டா சர்வீஸ்'நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் அடுத்த வாரம் முதல் 'ஆதார்' பதிவுபணியை துவக்க உள்ளது; இதில் குழந்தைகளின் போட்டோ மட்டும் பதிவு செய்யப்படும். தாய் அல்லது தந்தையின் கை ரேகை பதிவு செய்யப்படும். தாய், தந்தை இல்லாதவர்களுக்கு பாதுகாவலர் பெயர், எண் பதிவு செய்யப்படும்.

1 comment :

  1. 'யுனைடெட் டேட்டா சர்வீஸ்'நிறுவனம் நேரடியாக ஆதார் கார்டு எடுக்கிறதா, இல்லை அவர்கள் தனி முகவர்களை அமைத்து எடுக்க வைக்கிறதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி