Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 6, 2016

60 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறமையை வளர்க்கவும், அறிவியல் கற்கும் ஆர்வத்தை துாண்டவும் அறிவியல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி,
மாவட்டத்தில் 2,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத்திற்குள் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், மீன் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாய, தோட்டக்கலை பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் செல்லலாம். சுற்றுலா செல்ல வாகன வசதி, உணவு இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7.42 லட்சம் ரூபாய் வீதம் அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படும் 30 மாவட்டங்களுக்கு 2 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி