Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 6, 2016

மாற்றுக் கல்விக் கொள்கை அறிக்கை 8-ம் தேதி வெளியீடு.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு மாற்றாக மாற்றுக் கல்வி கொள்கை அறிக்கை சென்னையில் 8-ம்தேதி வெளியிடப்படுகிறது.இது தொடர்பாக கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
‘‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் குறைபாடுகள் உள்ளன. இதற்கு மாற்றாக கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் முன்னாள் துணைவேந்தர்வி.வசந்திதேவி உள்ளிட்ட 15 கல்வியாளர்கள் கொண்ட குழு தயாரித்துள்ள மாற்றுக் கல்வி கொள்கை அறிக்கை, வரும் 8-ம்தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடக்கும் கல்வி மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

அறிக்கையை கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி வெளியிடுகிறார். முதல் பிரதியை ஆந்திர சட்ட மேலவை உறுப்பினரும், கல்வியாளருமான பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொள்கிறார்’’ என்று தெரி வித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி