Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 8, 2016

பாட புத்தக தட்டுப்பாடு : தவிக்கும் மாணவர்கள்.

சமச்சீர் கல்விக்கான, இரண்டாம் பருவ புத்தகத்திற்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் தவிப்பில் உள்ளனர். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, தமிழக அரசின் பாடநுால் மற்றும் சேவை பணிகள் கழகம், மூன்று பருவங்களாக புத்தகங்களை வழங்குகிறது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாகவும், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகளிடம் இருந்து கட்டணம் பெற்றும், புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 3ல், பள்ளிகள் திறக்கப்பட்டன; தற்போது, இரண்டாம் பருவ பாடங்கள் நடத்த வேண்டும். புத்தகங்கள் கேட்டு, பல பள்ளிகள், ஆன்லைனில், விண்ணப்பித்துள்ளன. இதில், பல பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவ புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள் தவிப்பில் உள்ளனர். அச்சகங்களில் இருந்து புத்தகங்கள் தாமதமாக வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, பள்ளிகளிடம், பாடநுால் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி