Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 29, 2016

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு.

'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர்.
இந்த திட்டத்தால், கல்வித் தரம் குறைந்துள்ள தாக, மத்திய அரசின் ஆய்வு குழு
தெரிவித்துள் ளது.எனவே,ஆல்பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர் பாக, பல மாநிலங்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. அவற்றில், தென் மாநிலங்கள் மட்டுமே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

2 comments :

  1. மாணவர்களின் கல்வித்தரம் உயர ஆல் பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.கேரளா கல்வியில் முன்னேறியுள்ள மாநிலம் ஆகவே அங்கு எதிர்கின்ரார்கள்.

    ReplyDelete
  2. மாணவர்களின் கல்வித்தரம் உயர ஆல் பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்.கேரளா கல்வியில் முன்னேறியுள்ள மாநிலம் ஆகவே அங்கு எதிர்கின்ரார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி