sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Oct 26, 2016

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: அரசாணை ரத்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக தமிழக கருவூலம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளம் 28ம் தேதியே வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இது குறித்து வெளியிடப்பட்ட தமிழக அரசாணை செல்லாது என்று தமிழக கருவூலத் துறை கடிதம் ஒன்றை வெளியிட்டது. அதில், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழக்கம் போலதான் இம்மாதமும் 31ம் தேதி சம்பளம் வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி