Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 7, 2016

அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு உண்டா? : அறிவிப்பு இல்லாததால் குழப்பம்

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, அடுத்த கல்வி ஆண்டில், 'நீட்' என்ற, தேசிய நுழைவுத்தேர்வு உண்டா என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில்,அனைத்து மாநில மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அரசின் சார்பில், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில், நடப்பு கல்வி ஆண்டான, 2016 - 17க்கு மட்டும், நீட் தேர்விலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டது.ஆனால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நீட் தேர்வுப்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வு முடித்ததும், நீட் இல்லாமல், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, இந்திய மருத்துவ கவுன்சிலோ, இத்தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நிர்வாகமோ, இதுவரை விளக்கம் அளிக்கவில்லை; அதனால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில்,மாணவர்களிடம் தனி கட்டணம் பெற்று, நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி