Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 22, 2016

'பிற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்தாதீங்க!'

'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு காரணம் கருதி, பிற வங்கி ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்' என, அந்த வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மோசடி பேர்வழிகளின் கைவரிசையால், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சிலவங்கி வாடிக்கையாளர்களின், 'டெபிட்' கார்டுகளில் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின், 6.5 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மற்ற பொதுத் துறை வங்கிகளும், தங்கள், வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை முடக்கி உள்ளன. அந்த வகையில், மொத்தம், 32 லட்சம் கார்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, 'பின்' நம்பரை உடனடியாக மாற்றுமாறு, சில தனியார் வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.எனினும், நாட்டில் பயன்பாட்டில் உள்ள மொத்த கார்டுகளில்,0.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டு உள்ளதாகவும், 99.5 சதவீத கார்டுகளின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், வங்கிகள் தரப்பில் கூறப்பட்டுஉள்ளன. இந்நிலையில், 'எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பிற வங்கி, ஏ.டி.எம்.,களை பயன்படுத்த வேண்டாம்; பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே, இந்த அறிவுரை வழங்கப்படுகிறது; வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்' என, அந்த வங்கியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி