Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 13, 2016

விரைவில் புது கல்வி கொள்கை : அமைச்சர் ஆலோசனை.

மேம்படுத்தப்பட்ட, புதிய கல்விக் கொள்கையை அறிவிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதற்காக, இரண்டு உயர்மட்டக் குழுக்களுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளார்.
கடந்த, 2014ல், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்தது முதல், கல்வி தொடர்பான பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. பள்ளிப் பாடங்களில் சமஸ்கிருதம் சேர்ப்பு உள்ளிட்ட, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், கல்வி, காவி மயமாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டின. இதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மறுப்பு தெரிவித்து வருகிறது.இதற்கிடையே, 30 ஆண்டுகளுக்கு மேலாக, எவ்வித மாற்றம் இன்றி நீடித்து வரும் கல்விக் கொள்கையில், தற்காலத்துக்கு ஏற்ப அதிரடி மாற்றங்களை புகுத்த, மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவு செய்தது. புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான, நிபுணர் குழுவிடம், மே மாதம் ஒப்படைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறக் கூடிய விஷயங்களின் சாராம்சம், 40 பக்கத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக, பார்லி மென்ட் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டுப் பெற, மனித வள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக நடக்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில், கல்விக்கொள்கை, தொடர்புடைய பிரச்னைகள், இதுவரை பெறப்பட்ட ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. சி.ஏ.பி.இ., எனப்படும், மத்திய கல்வி ஆலோசனை வாரிய உயரதிகாரிகளுடன், மற்றொரு ஆலோசனைக் கூட்டம், 25ல் நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களை, எட்டாம் வகுப்பு வரை, 'பெயில்' ஆக்காமல், தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் குறித்து,இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

6 comments :

  1. Tet sarnthu comment thanthavarkal kadantha our vaaramaka kalviseithi & what's app I'll amaithiyaka irukka karanam enna? Avarkal (valaku potavarkal) thankalukullay alaipesiel pesi kolvathin rakasiyam enna? Valaku iruthi kattathai ettiya nilaiel iruki nirpathin nookam enna?

    ReplyDelete
  2. 82aaa 90 aaa ena sandai ittavarkal

    Tharpothu

    Valaku pottavarkala? Valaku podathavarkala?

    O ithuthan pothunalam?

    ReplyDelete
  3. Our mika periya unmai ennavenraal

    Valaku pottavarkalil perumpaanmaiyanvarkal tamil paada pirivai saarnthavarkal. Ivarkalil perumpaanmaiyanavarkal mathipennum kuraivu waitage um kuraivu.

    Eppadi theerpu valankinalum tamiluku mattum 500 pani idankal othukinalum ivarkalal pani pera mudiyathu.
    So valaku potavaruku mattumay velai ena koori thanathu aatramaiyai veli paduthukirarkal.

    ReplyDelete
  4. Pgtrb varuma? Then eppo varum?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. i think it will be delayed....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி