Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 31, 2016

தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பு

ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சமச்சீர் கல்வியில், தமிழ் பாடத்தை எளிதில்கற்றுக்கொடுக்க, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், வீடியோ பாடங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. 'தாயெனப்படுவது தமிழ்' என்ற, இந்த வீடியோ தொகுப்பு, இணையதளத்தில், 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் நடனத்துடன், தமிழகத்தின் பல ஊர்களில், 40 பாடங்களும், பாடல்களாக படமாக்கப்பட்டுள்ளன. இந்தவீடியோ தொகுப்பு, 'சிடி'யை, 35 ஆயிரம் தொடக்க பள்ளிகளுக்கு, இலவசமாக அனுப்ப, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, வீடியோ, 'சிடி'யை இலவசமாக தர, மாவட்டஅதிகாரிகள் மறுத்துள்ளனர்.

'தமிழகத்தின் பல கிராமங்களிலும், அரசு தொடக்க பள்ளிகளை விட, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அவர்களுக்கு பலன் தரும் வகையில், பாடல், 'சிடி'யை இலவசமாக வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி