sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Oct 26, 2016

புதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்ப்பு!

"கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி 2015 டிசம்பர் வரை மட்டுமே முறையான கல்விதேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில்அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும் 2020-ம் ஆண்டு வரை அப்படியானஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது"
*மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநிலஅமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம்தலைநகர் தில்லியில் இன்று நடந்தது. புதிய வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்றஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக் குழுவினர் கருத்துக் கேட்புக்களைநடத்தினர். அதன் பின்னர் “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மத்தியமனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினர்.புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசுஅதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர்தில்லியில் இன்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில கல்விஅமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமுக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம் வகுப்புவரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்ப பெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையைகொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம் மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாததனியார் பள்ளி ஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.இதில் 8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்கு தமிழக அரசின்சார்பில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்து அவரிடம் பேசினோம்." இரண்டு முக்கியமான அம்சங்கள் இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக இந்த8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து என்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினைதொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது.அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்க முடிவுசெய்துள்ளது.

*"கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி 2015 டிசம்பர் வரை மட்டுமேமுறையான கல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது.தமிழகத்தில் அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும் 2020-ம் ஆண்டு வரைஅப்படியான ஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது"

*. அதே போலசமஸ்கிருத பாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன் வைக்கப்பட்டது.வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதி முடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள்எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன்வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் எனதெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி