Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 22, 2016

தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வசூலிக்கப்படாது: வோடபோன் அறிவிப்பு.

தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வசூலிக்கப்படாது என வோடபோன் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சூறாவளியை சமாளிக்க நாள்தோறும் புதிய அறிவிப்புகளை ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வோடபோன் நிறுவனமும் இணைந்துள்ளது.

வோடபோன் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குனர் சந்தீப் கட்டாரியா கூறுகையில் "தீபாவளி முதல் ரோமிங் அழைப்புகளுக்கான இன்கமிங் கட்டணம் வோடபோன் நிறுவனத்தில் வசூலிக்கப்படாது. இதனால் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் அழைப்பு நின்றுவிடுமோ என்று பயம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.ஏற்கனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த ஜூன் 15-ம் தேதி ரோமிங்கில் இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி