Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 27, 2016

தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை?

தீபாவளிக்கு முதல் நாள், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர் விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளன. தீபாவளி பண்டிகை, அக்., 29ல் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆயுத பூஜை பண்டிகை முதலே, தீபாவளி பண்டிகைக்கான முன் தயாரிப்புகள் துவங்கி உள்ளன.
தீபாவளி பண்டிகை, சனிக்கிழமை வருவதால், அதற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை வரையும், அதேபோல், அக்., 31, திங்கள் கிழமையும் வழக்கம் போல், பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல தனியார் பள்ளிகள், வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை.

எனவே, ஆசிரியர், மாணவர், பெற்றோர் வேண்டுகோள்படி, பல மாவட்டங்களில், உள்ளூர் விடுமுறை எடுத்து கொள்ள, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.சில பள்ளிகள், வெள்ளிக்கிழமை மதியம் வரை, பள்ளிகளை இயக்க முடிவு செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், அதற்கு பதில், வரும் வாரங்களில்விடுமுறை நாளான சனிக்கிழமையில், ஈட்டு வகுப்பு நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி