Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 13, 2016

பணியின்போது ஊனம்; மத்திய அரசு ஊழியர் விதிகளில் மாற்றம்.

மத்திய அரசு பணியில் இருக்கும் போது ஊனம் ஏற்பட்டால்,அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதோ, பதவி குறைப்போ செய்யக் கூடாது' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஊனம் ஏற்பட்டால்...

இதுகுறித்து, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பணியின் போது, ஒருவருக்கு ஊனம் ஏற்பட்டால், அதற்காக அவரை பணியில் இருந்து நீக்கவோ அல்லது பதவி குறைப்போ செய்யக் கூடாது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

பணியில் தொடர வாய்ப்பு

அதே போல், திடீரென ஏற்பட்ட ஊனத்தால், பணியில் தொடர முடியாத ஊழியர்களுக்கு, உரிய கிராஜுவிடி மற்றும் பென்ஷன் தரப்பட வேண்டும். உடல் ஊனமுற்றோர் நலச் சட்டத்தின்படி, ஊனமுற்ற ஊழியர்கள் பணியில் தொடர்வதற்கு வாய்ப்பு தர வேண்டும்; ஊனமுற்றவர் என்பதற்காக, பதவி உயர்வு மறுக்கக் கூடாது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

2 comments :

  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்று வேலைக்காக காத்துக் கிடக்கின்ற பலர் எவ்விதத் தேர்வும் எழுதாமல் பதவி உயர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் தட்டி
    பறிக்கின்றனர் அவர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு வைத்து அதன் முலம் தேர்வு செய்ய வேண்டும் இதற்கு வழக்கு தொடருங்கள் அப்பொழுதுதான் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் பலர் பாதிக்கப்பட மாட்டார்கள்

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்று வேலைக்காக காத்துக் கிடக்கின்ற பலர் எவ்விதத் தேர்வும் எழுதாமல் பதவி உயர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் தட்டி
    பறிக்கின்றனர் அவர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு வைத்து அதன் முலம் தேர்வு செய்ய வேண்டும் இதற்கு வழக்கு தொடருங்கள் அப்பொழுதுதான் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் பலர் பாதிக்கப்பட மாட்டார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி