sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Oct 22, 2016

இணையதளத்தில் கட்டண விபரம் : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு.

இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பாட வாரியான கட்டண விபரத்தை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்'என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.நாட்டில் பல மாநிலங்களில், இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வசதிகள் இல்லை.
இந்த மாநில மாணவர்கள், மற்ற மாநில கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேர்கின் றனர். சில நேரங்களில், படிப்பில் சேர வரும் மாணவர்களை, கட்டணம் தொடர்பான, அடிப்படையில்லாத காரணங்களை கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உத்தரவு படி, அனைத்து கல்லுாரிகளும், முக்கிய பாடவாரியாக, மாணவர்களின் கட்டண பட்டியலை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அதே போல், சுயநிதி பல்கலைகளுக்கும், மத்திய அரசின் சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி