Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 20, 2016

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடந்து முடிந்தது. மேலும் டிசம்பர் மாதத்திற்குள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கற்பித்து முடிக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதியும், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காகவும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி நாட்களில் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தேர்வு வருவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பாடங்களையும், முடித்து, மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்தவேண்டும். முழுப்பாடங்களை கொண்டுதான் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதை வைத்து மாணவர்களின் தேர்ச்சியை ஓரளவிற்கு அறியமுடியும். இதனால் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன், நன்கு பாடம் கற்பிக்கும் மாணவர்கள் மற்றும் மெல்ல பாடம் கற்பிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஏற்றார்போல், சிறப்பு பயிற்சிகள் மற்றும் எழுத்து தேர்வுகளை நடத்தப்படும். இதனால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது’ என்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி