Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 16, 2016

கலாம் பிறந்த மண்ணில் 'வீட்டுக்கு வீடு விஞ்ஞானி' : பள்ளி மாணவர்களுக்கு பட்டதாரி இளைஞர்கள் ஊக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த மண்ணில் அவரது கனவை நனவாக்கும் விதமாக பரமக்குடியில் பட்டதாரி இளைஞர்கள் 'வீட்டுக்கு வீடு விஞ்ஞானி' என்ற இலட்சிய பணியை மேற்கொண்டு வருகின்றனர். நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் எப்போதோ, எங்கோ கேட்ட விஷயங்கள் ரீங்காரமாய் மனதில் அலைபாயும்.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த அணுநாயகன் கலாம், ஒவ்வொரு மாணவர்கள் மத்தியிலும் எதிர்கால இந்தியா குறித்து பேசிஅவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார். இதன் தாக்கம் தான் பரமக்குடியைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி கார்த்திகேயன், எம்.இ., பட்டதாரி பாலமுருகன் ஆகியோருக்கு புதிய கண்டுபிடிப்புகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் 'வீட்டுக்கு வீடு விஞ்ஞானி' என்ற அறக்கட்டளையை துவக்கி, அதன் மூலம் பள்ளி மாணவர்கள்மத்தியில் எளிய முறையிலான கண்டுபிடிப்புகள் குறித்து ஊக்கம் அளித்து வருகின்றனர். இவர்களது பயிற்சியின் மூலம் மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பியதும் அலாரம் அடித்தல், விவசாயத்தில் பயிர்கள் வெப்ப நிலையை அடைந்ததும் தானாகவே செடிகளுக்கு தண்ணீர் தெளிப்பது, துாக்கி வீசப்படும் அலைபேசிகள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பியவுடன் வாய்ஸ் மெசேஜ் கொடுப்பது, தெர்மோகூல் மூலம் ஏ.சி., வசதி என, மாணவர்கள் குறைந்த செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறிவியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

இது குறித்து பட்டதாரி இளைஞர்கள் கூறியதாவது: கலாம் நினைவை போற்றும் வகையில் கிராமப்புற மாணவர்களும் விஞ்ஞானி ஆகலாம் என்ற நோக்கில் அறக்கட்டளையை துவக்கினோம். நாங்கள் கிராமப்புற மாணவர்களை விடுமுறை நாட்களில் அவர்களின் வீடுகளுக்கே சென்று அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்புகள் குறித்த ஆர்வத்தை துாண்டுகிறோம். அவர்களிடம் இருந்து கண்டுபிடிப்புகள் குறித்த ஆர்வத்தை குறிப்பெடுத்து கொள்வோம். பின்னர் தேவையான ஆலோசனைகளை கூறி அவர்கள் மூலமாக விரும்பிய படைப்புகளை உருவாக்க ஊக்கமளிப்போம். இவர்களது அறிவியல் படைப்புகளை, பள்ளிகளில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி தொடங்கி, மத்திய அரசின் 'இன்ஸ்பயர்' அவார்டுக்கான கண்காட்சி வரை பங்கேற்க செய்து ஊக்குவித்து வருகிறோம்.

 எங்களிடம் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புராஜெக்ட் செய்துள்ளனர். இது குறித்து ஒவ்வொரு மாணவரின் கண்டுபிடிப்புகளையும் தொகுத்து ஒலிநாடாவாக தயார் செய்துள்ளோம். இதனை கலாம் பிறந்த நாளான அக்.,15ல் அவர்களது வீட்டிலேயே வைத்து வெளியிட அனுமதி வாங்கியுள்ளோம். இப்பணியை சேவையாக செய்து வரும் நாங்கள் எதிர் காலத்தில் எளிய வகையான கண்டு பிடிப்புகளை தயார் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம், என்றனர்.

இவர்களை வாழ்த்த 96777 71658

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி