Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 9, 2016

SSLC. சிறப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்குஅசல் மதிப்பெண் சான்றிதழ் 19-ந் தேதி முதல் வினியோகம்

அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜூன், ஜூலை-2016-ல் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 28.7.2016 முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 25-ந் தேதி வரை மட்டுமே செல்லும்.எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுதிய அனைவருக்கும் 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் அலுவலக நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. 26-ந் தேதிக்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி