Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 7, 2016

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 21

1. ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர் - பாணர்
2. குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்
3. ஹர்ஷர் காலத்தில் வருகை புரிந்த சீன யாத்தீரிகர் - யுவான்சுவாங்
4. சமுத்திரகுப்தரை அறிய உதவும் கல்வெட்டு - அலகபாத் கல்தூண் கல்வெட்டு

5. பாராந்தகச் சோழரை அறிய  உதவும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு
6. ரோமானியர் வழங்கிய மாபெரும் நன்கொடை - குடியரசு தத்துவம்
7. தட்சசீலம் எதற்கு எடுத்துக்காட்டு - காந்தரக் கலை
8. மராட்டிய பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் - நிர்வாக குறைபாடு
9. பாபரின் படையெடுப்புகளை கால வரிசைப்படி குறிப்பிடுக - முதல் பானிபட் போர், கான்வா போர், சந்தேரிப் போர், கோக்ரா போர்
10. கந்தர்வ வேதத்தை இயற்றியவர் - பரத முனிவர்
11. சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்த சாஸ்திரம்
12. மவுரியர்களின் ஆட்சியை அறியத் தரும் நூல் - அர்த்த சாஸ்திரம்
13. காஷ்மீர் வரலாற்றை அறிய உதவும் நூல் - ராஜதரங்கினி
14. ராஜதரங்கிணியை இயற்றிய ஆசிரியர் - கல்ஹாணர்
15. சந்திர குப்த மவுரியர் காலத்தில் இந்தியா வந்த அயல்நாட்டு யாத்திரிகர் - மெகஸ்தனிஸ்
16. கிமு.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன - மகாஜனபதங்கள்
17. ரோமபுரிக்கும் தமிழகத்திற்கும் வாணிகத் தொடர்பு இருந்தமையை உணர்த்தும் நாணயம் - அரிக்மேட்டில் கிடைத்த நாணயம்
18. ஆரியர்களின் பூர்வீகம் - மத்திய ஆசியா
19. இந்தியா மீது படையெடுத்து வந்த கிரேக்க வீரன் - மாவீரன் அலெக்சாண்டர்
20. அலெக்சாண்டரை எதிர்த்த இந்திய மன்னன் - புருஷோத்தமன்
21. விந்தியமலைக்குத் தெற்கில் அமைந்துள்ள பகுதி - சாத்பூரா மலைகள்
22. வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவை பிரிக்கும் மலை - விந்தியமலை
23. தக்காண பீடபூமிக்குத் தெற்கில் உள்ள பகுதி - தமிழகம்
24. அரேபியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - யவனர்
25. இந்தியாவில் பூர்வீகமானவர்கள் - திராவிடர்
26. சிந்து சமவெளி நாகரீகத்தை அறிய உதவும் அகழ்வாராய்ச்சி - மொகஞ்சாதாரோ - ஹரப்பா ஆராய்ச்சி
27. தென்னக வரலாற்றை அறிய உகவும் அகழ்வாராய்ச்சி - அரிக்கமேடு ஆராய்ச்சி
28. கைபர்- போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டவர் - ஆரியர்கள்
29. இந்தியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கணவாய் - கைபர் - போலன் கணவாய்
30. இந்தியா ஒரு - தீபகற்பம்
31. மூவேந்தர்களுடன் தமிழகத்தை ஆண்ட மற்றொரு வேந்தன் - பல்லவர்கள்
32. இந்தியாவின் இயற்கை அரண் - இமயமலை
33. புத்தர் எங்கு மறைந்தார் - குசி நகரம்
34. அமிர்தசரஸ் நகரை நிறுவியவர் - குரு ராம்தாஸ்
35. ராஷ்டிரகூடர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு - சிவபெருமானின் நடன உருவம்
36. ராஷ்டிரகூடர் தலைநகர் மான்யகேதாவில் கட்டிய ஆலயம் - உலகேஸ்வரன், தசாவதாரக் கோவில்கள்
37. ராஷ்டிரகூட இளவரசியை மணந்த சோழ அரசன் - ஆதித்தியன்
38. ராஷ்டிரகூடர்களின் கடைசி அரசர் - இரண்டாம் கரகர்
39.ராஷ்டிரகூடர்களின் ஆட்சி எந்த ஆண்டு முடிவுற்றது - 973-ல்
40. ராஷ்டிரகூட  வேந்தன் இரண்டாம் கரகரைத் தோற்கடித்த சாளுக்கிய வேந்தர் - இரண்டாம் தைலா
41. ராஷ்டிரகூடர்களின் தலைநகர் - மான்யகேதம்
42. ராஷ்டிரகூடர்களின் முதல் அரசன் - தந்திதுர்க்கன்
43. தந்திதுர்க்கனின் மாமன் - முதலாம் கிருஷ்ணன்.
44. தந்திதுர்க்கன் தோற்கடித்த சாளுக்கிய அரசன் - கீர்த்திவர்மன்
45. தந்திதுர்க்கன் முதலில் எத்தகைய பணியாற்றினார் - வேலைக்காரர்
46. தந்திதுர்க்கனுக்குப்பின் அரச பொறுப்பை ஏற்றவர் - மாமன்
47. முதலாம் கிருஷ்ணன் கட்டிடக்கலைக்கு நல்ல சான்று - எல்லோரா - கைலாசநாதர் கோவில்
48. முதலாம் கிருஷ்ணன் தோற்கடித்த மன்னன் - இரண்டாம் கீர்த்திவர்மன்
49. முதலாம் கிருஷ்ணன் காலம் - 757 - 775
50. இரண்டாம் கோவிந்தன் திறமையற்றவராக விளங்கியதால் ஆட்சியைக் கைப்பற்றியவர் - சகோதரர் - துருவன்
                                                                                                                                 தொடரும்...

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி