Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 18, 2016

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை -25

1. இந்தியாவில் லோடி பேரரசு முடிவுக்கு வர காரணமான போர் - பானிபட் போர்
2. பானிபட் போர் நடந்த ஆண்டு - 1526
3. பானிபட் போருக்குப்பின் தோன்றிய அரசு - முகலாயப் பேரரசு
4. பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது - பாபர் - இப்ராஹிம் லோடி

5. நிலங்களைத் தனமாக வழங்கும் முறைக்குப் பெயர் - ஜாகிர் முறை
6. முகமதியர் அல்லாதவர் மேல் விதிக்கப்பட்ட வரி - ஜிஸ்யா வரி
7. சுல்தானிய ஆட்சி முறை என்பது - இந்திய, பாரசீக, துருக்கிய ஆட்சிமுறைகளின் கலவை.
8. சுல்தானுக்கு ஆலோசனை வழங்க எத்தனை அமைச்சர்கள் இருந்தனர் - 4 முதல் 6
9. இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலமாக்கள்
10. சுல்தான்களின் நாடு எவ்வாறு பரிக்கப்பட்டது - மாநிலம்
11. மாநிலத்தின் பொறுப்பாளர் யார் - ராணுவ ஆளுநர்
12. மாநில அளவில் நீதி வழங்கும் பணியைச் செய்தவர் - காஸி
13. சுல்தான்கள் அரசின் முதன்மையான வரி - நில வரி
14. முஸ்லீம்கள் மீது விதிக்கப்பட்ட நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது -  உஷர்
15. இந்துக்களின் மீது விதிக்கப்பட்ட நிலவரி - கிராஜ்
16. சமயவரி எவ்வாறு அழைக்கப்பட்டது - ஜிஸ்யா
17. நீதிவழங்குவதில் அரசருக்கு ஆலோசனை கூறியவர்கள் - காஸிகள்
18. பல கிராமங்களின் தொகுப்பு எவ்வாறு வழங்கப்பட்டது - பர்கானா
19. சுல்தானின் ஆட்சிக் காலம் - 1206 - 1526
20. தில்லி சுல்தானியத்தை ஆண்ட வம்சங்கள் எத்தானை - 5
21. சுல்தானியர்கள் காலத்தில் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தன - 4
22. தில்லி சுல்தான்களின் அரசுக்கு எதிராக உருவான இயக்கம் - பக்தி இயக்கம்
23. பக்தி இயக்கத்தினால் வளர்ந்தது - சூபிசம்
24. ராமனுஜர் காலம் - கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
25. ராமானுஜரின் கொள்கை - விஜிஸ்டாத்துவைதம்
26. முக்தியை அடையும் வழியாக கூறியது - பக்தி
27. ராமனுஜரின் வழித்தோன்றல் - ராமானந்தர்
28. ராமானந்தரின் சீடர் - கபீர் தாசர்
29. இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற கிருஷ்ண பக்தர் - வல்லபாச்சாரியர்
30. பக்தி இயக்கத்தின் தலை சிறந்த வித்தகர் - சைதன்யர்
31. ராமனும் ரஹீமும் ஒருவரே என்றவர் - கபீர்
32. சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் - குருநானக்
33. சீக்கியர்களின் புனித நூல் - ஆதிகிரந்தம்
34. பக்தி நெறி பரப்பிய நாமதேவர், ஏகநாதர், துக்காராம் ஆகியோர் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மஹாராஷ்டிரா
35. ராஜஸ்தானில் ஆடம்பர வாழ்வைத் துறந்து கிருஷ்ணபக்தையானவர் - மீராபாய்
36. சூபிகள் யார் - பாரசீகத்திலிருந்து வந்த இஸ்லாமியத் துறவிகள்.
37. சூபிகளின் பக்திப்பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன - கவாலிகள்
38. ஆஜ்மீரில் வாழ்ந்த புகழ்பெற்ற சூபி துறவி - நிசாமுதீன் அவுலியா
39. சுல்தான்களின் காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய கட்டமைப்புகளின் ஒன்று - பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ்
40. சுல்தான்களின் காலத்தில் தோன்றிய புதிய மொழி - உருது
41. சுலல்தான்களின் காலத்தில் தோன்றிய இசை - இந்துஸ்தானி இசை
42. இந்துஸ்தானி இசையைப் பரப்பியவர்கள் - சூபிகள்
43. குதுப்மினார் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது - சுல்தான்கள்
44. கிதார் என்னும் இசைக் கருவி யார் காலத்தில் பழக்கத்திற்கு வந்தது - சுல்தான்கள்
45. தில்லியில் உள்ள அழகு வாய்ந்த கல்லறையில் யாருடையவை - லோடி வம்சத்தினர்
46. பாமினி அரசைத் தோற்றுவித்தவர் - அலாவுதீன் பாமன்ஷா
47. பாமினி அரசைத் தோற்றுவித்த ஆண்டு - 1347
48. பாமினிப்பேரரசின் தலைநகர் - தக்காணத்திலுள்ள குல்பர்கா
49. பாமினிப் பேரரசு உட்பகுப்பு முறைக்குப் பெயர் - ஜாஹிர்
                                                                                                                                 தொடரும்...

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி