Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Oct 28, 2016

TNTET:ஆசிரியர் தேர்வில் எவ்வித குளறுபடியும் நடைபெறவில்லை-தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்.

ஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் இடம்பெற்ற மனு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது.
இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ் டூ, பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.இதையடுத்து, ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றில் வழக்குகளைத் தொடுத்தனர்.

இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன.இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் 423 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை இம்மாத தொடக்கத்திலும் கடந்த செவ்வாய்க்கிழமையும் விசாரித்தஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.அப்போது, நீதிபதிகள் தமிழக அரசு தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இதன்படி, தமிழக அரசு தரப்பில் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வ வாதங்கள் அடங்கிய மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வில் எவ்வித குளறுபடியும் நடைபெறவில்லை. நடைமுறை விதிகள் எதுவும் மீறப்படவில்லை. எனவே, மனுதாரர்களின் மேல்முறையீட்டைத்தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

25 comments :

 1. Ada pavihala mulu poosanikaya sothula amukuringalaeda! Poi sonna naaku aluhi poyirum!

  ReplyDelete
 2. குளறுபடி எதுவும் நடைபெறவில்லை.
  குட்டையையே அல்லவா குளப்பிவிட்டுவிட்டார்களே..!

  ReplyDelete
 3. தனிப்பட்டவர்க்கு இந்த நாட்டில் நீதி இல்லை சாமனியனின் ஓட்டு அரசியல் சாசனம் இதுதான் இது பாதிக்கபட்டவர்க்கு மட்டுமில்லை எதிர்காலத்தில் அரசை எதிர்ப்பவர்களுக்கும்

  ReplyDelete
 4. எங்களது நோக்கம் எங்களுக்கு வேலை எதிர்காலத்தில் சரியான தேர்வு முறையே ஆனால் நடக்க போவது கடவுளுக்கே வெளிச்சம்

  ReplyDelete
 5. நடப்பது மக்களாட்சி என்றால் நீதி மன்றம் என்று ஒன்று உண்டு ஆனால் ஒட்டு போடும் போது மக்களாட்சி வெற்றி பெற்றவுடன் மன்னராட்சி என்ற நிலையே இந்த நாட்டில்

  ReplyDelete
 6. எது எப்படியோ இந்த நாடும் மக்களும் ------, -------

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. ..2013 la tet nadakkave illai entru sollividunkal vazhakku thallupadi aaga vaippu athikam....vazhka T.N

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. manuthararukku theerpu sadhagamaga vandhal tamilnadu govt Mel muraiyeedu seiyuma? 2017 I'll tntet vara vaaippu ulladha? please reply

  ReplyDelete
  Replies
  1. Intha govt kandippa melmurayedu seyyum
   Athuthan tn govt

   Delete
 12. Puthiyathalaimurai news ??????????

  ReplyDelete
 13. gog ku karunai elai govt ku vara pokutha govt sola nenaikaratha sc solum etha indian political justice.

  ReplyDelete
  Replies
  1. Enna sollavata ne? Onnum puriyala

   Delete
  2. Enna sollavata ne? Onnum puriyala

   Delete
 14. gog ku karunai elai govt ku vara pokutha govt sola nenaikaratha sc solum etha indian political justice.

  ReplyDelete
 15. gog ku karunai elai govt ku vara pokutha govt sola nenaikaratha sc solum etha indian political justice.

  ReplyDelete
 16. fulla unmaiya tn govt maraikaranuka etha Indian Supreme Court justice??????
  ena kodumai..

  ReplyDelete
 17. Supreme courtavae neenga vilai kuduthu vaanguvingada!entha kularupadiyum illainu solli ithula kularupadia eluthupoorva arikai kudutha naanga summa Vida matom! Enga vayiru erichala anika kadal thanniyae pathaathu! BY 90+ Groups

  ReplyDelete
 18. Supreme courtavae neenga vilai kuduthu vaanguvingada!entha kularupadiyum illainu solli ithula kularupadia eluthupoorva arikai kudutha naanga summa Vida matom! Enga vayiru erichala anika kadal thanniyae pathaathu! BY 90+ Groups

  ReplyDelete
 19. அனைவருக்கும் வணக்கம்! கல்விசெய்தி இணையதளமானது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் பல நல்ல தகவல்களைத் தருகின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த இணையதளத்தின் வாயிலாக புதிய செய்திகளும் உடனுக்குடன் பதிவிடப்படுகிறது என்கிற காரணத்தினால் ஆசிரியப்பணியில் உள்ளவர்களும், ஆசிரியப்பணியை எதிர்நோக்கி காத்திருப்போரும் அடிக்கடி இந்த தளத்தை விஜயம் செய்வது உண்டு.பணியை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் தகுதிதேர்வின் நீதிமன்ற முடிவு எப்படி வருமோ என்ற கவலையில் உள்ளார்கள். பணியில் உள்ளவர்களின் ஏக்கத்தை காட்டிலும் பணியை எதிர்நோக்கி உள்ளவர்களின் ஏக்கம் தான் அதிக வலியை தருகிறது. வலியோடு உள்ளவர்கள் தங்களின் வலிமையையும் சில இடங்களில் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. எத்தனையோ லட்சம்பேர் படித்து பட்டம் பெற்று ஒவ்வொரு வருடமும் வெளியேறுகின்றனர். ஆக நமக்கு போட்டியாளர்கள் அதிகரித்து கொண்டே போகிறார்கள். ஆனால் காலிப்பனியிடம் அதிகரிக்கவில்லை. இங்கு தான் நாம் சற்று அதிகமாக சிந்திக்க வேண்டும். நமக்கு வேலை வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருக்கும், அதைப்போல காளிப்பனியிடமும் அதிகரிக்க நாம் தான் முன் வரவேண்டும், எப்படி சார் இது சாத்தியம்னு நீங்க கேக்கலாம். கொஞ்சம் பொறுமையா படிங்க, 1992 க்கு அப்புறமா எந்த ஒரு தனியார் பள்ளிக்கும் அரசு நிதி உதவி கொடுக்கல, ஆனா அவங்களுக்கு சுய நிதியில் மேல் வகுப்புகள் ஆரம்பிக்குறதுக்கு அனுமதி கொடுத்திருக்கு, அதே சமயம் எந்த ஊரிலும் அரசு புதிதாக பள்ளிகள் ஆரம்பித்தாலும், தரம் உயர்த்தப்பட்டாலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படும். இப்போவே உங்களுக்கு ஓரளவு புரிஞ்சிருக்கும் னு நெனைக்கிறேன். ஒரு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆக எவ்வளவு தான் சுய நிதி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டினாலும், அவர்களுக்கு அரசின் நிதி உதவி கிடைக்காது என்பது தெளிவாகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் போது, ஆசிரிய மாணவர்களின் விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.இந்த நியமனம் ஒருபோதும் சுய நிதி பள்ளியில் இல்லை என்பதை நினைவில் கொள்க. ஆக முதலில், நாம் (அதாவது பணியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருப்பவர்கள்) செய்ய வேண்டிய முதல் வேலை நமது ஊரில் உள்ள பள்ளிகளில் நமது குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கும்போது மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும், உயர்ந்தால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் உயரும், அதனால் நமக்கும் அரசு பணி கிடைக்கும். சரி சார் அரசு பள்ளியில நல்லா சொல்லித்தர மாட்டாங்களே னு ஒரு கேள்வி வருது அதானே, ஒவ்வொரு ஊர்லயும் கிராமக் கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் னு சங்கங்கள் செயல்படுது. அவர்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை சந்தித்து மாணவர்களின் நலன் குறித்தும் பள்ளியின் வளர்ச்சி குறித்தும் மாதம் ஒருமுறை கலந்துரையாடியும், பெற்றோர்கள் கூட்டமும் நடத்தினால், நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும். போங்க சார் இதெல்லாம் நடக்கிற காரியமா, இதெல்லாம் பாக்குறதுக்கு எங்கே நேரம் இருக்கு அப்பிடின்னு நினைக்க தோணுதா? ஒரு நிமிஷம் சார், உங்களால் எது முடியாது என்று சொல்லப்படுகிறதோ, அதே வேலையைத்தான் இன்றைக்கு அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளும் செய்து கொண்டு இருக்கின்றன. நாமும் அதற்க்கு அடிமையாகி விட்டோம் நமது விருப்பபடியே. தற்போது உள்ள சுயநிதி பள்ளிகள் நம்மிடமே பணத்தை வாங்கிக்கொண்டு, உங்கள் குழந்தைக்கு கல்வி கற்கும் அணைத்து சூழலும் எங்கள் பள்ளியில் உள்ளது என்று கூறுகின்றன. ஆக ஒரு தனி நபரின் பள்ளி வளர்ச்சிக்கு(நீங்கள் உரிமை கோர முடியாது) உங்கள் பணத்தை (திரும்ப பெறமுடியாத முதலீட்டை) கொடுத்து, அவர்களின் சொத்துக்கள் அதிகரிக்க மறைமுகமாக உதவி செய்யும் நீங்கள் ஏன்? அரசு பள்ளியில் எந்த பணமும் நீங்கள் கட்டாமல் (திரும்ப பெறமுடியாத முதலீடு)அரசு கொடுக்கும் இலவச கல்வி உங்களுக்கு கசக்கிறது.தனியார் பள்ளிகள் வழங்கும் அணைத்து வசதிகளும் உங்களைப்போன்ற பெற்றோர்களிடமிருந்து வாங்கப்பட்டது தான். சுய கவுரவத்திற்காக பல பெற்றோர்கள் தங்களின் பெரும்பான்மை வருமானத்தை ஆரம்பக்கல்விக்கே செலவிட்டு, மேல்படிப்பு படிக்க வைக்க முடியாமல் திண்டாடும் எத்தனையோ குடும்பங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் அதிகம் வசூலித்து விடுவார்கள், ஆனால் அங்கு பணி புரியும் ஆசிரியர்களின் வருமானம் மிகவும் சொற்பம் தான். குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல், படித்த படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலை செய்யவேண்டிய நிர்பந்தத்தில் படித்த பல இளைஞர்கள் உள்ளனர். ஆகவே, சிந்தியுங்கள் மக்களே, நமக்கு வேலை வேண்டும் என்றால், நமது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து, அனைவரும் பணி பெறுவோம். நன்றியுடன் கார்த்தி

  ReplyDelete
 20. Sir athuku govt teachers kulanthaihal anaivarum kandipa govt schools la matumthan padikanum nu our GO podanum! Athuthan ithuku sariyana mudivu!?

  ReplyDelete
 21. Sir athuku govt teachers kulanthaihal anaivarum kandipa govt schools la matumthan padikanum nu our GO podanum! Athuthan ithuku sariyana mudivu!?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி