Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 1, 2016

பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை யோகாவை கட்டாயமாக்க பொதுநல வழக்கு: உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்கிறது.

தேசிய யோகா கொள்கை வகுக்க வும், நாடு முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை யோகாவை மாணவர்களுக்கு கட்டாயமாக்கவும் கோரும் பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது.இது தொடர்பாக வழக்கறி ஞரும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உயாத்யாய உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், “உயிர்வாழும் உரி மையை அரசியல் சட்டத்தின்21-ம் பிரிவு மக்களுக்கு அளிக்கிறது. நலமுடன் வாழ்வதற்கான உரிமை இதன் ஒருங்கிணைந்த பகுதியாகும்.உடல்நலனைப் பாது காத்துக் கொள்வது, நோய் வராமல் தடுப்பது, நோய் வந்தால் குணப்படுத்திக் கொள்வது ஆகிய வற்றையும் இது உள்ளடக்கியது.

ஒருவர் கண்ணியத்துடன் வாழ்வதற்கு இவை குறைந்தபட்சத் தேவையாகும்.அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளர் இளம் குழந்தைகளுக்கு சுகாதார வசதிகளை அளிப்பது ஓர் அரசின் கடமையாகும். மக்கள் நலமுடன் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை உறுதி செய்வதும் அரசின் கடமையாகும்.அனைத்து குழந்தைகளுக்கும் யோகாவை கட்டாயம் ஆக்காவிட்டாலோ அல்லது யோகாவை பரப்புவதற்கு தேசிய கொள்கை வகுக்காவிட்டாலோ நலமுடன் வாழ்வதற்கான உரிமை பாதுகாப்பாக இருக்க முடியாது.நாடு முழுவதும் அரசு செல வில் சுமார் 20 கோடி குழந்தைகள் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி பயில்கின்றனர். இவர் களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச் சகம், மத்திய கல்வி வாரியங்களான என்சிஇஆர்டி, என்சிடிஇ, சிபிஎஸ்இ ஆகியவற்றுக்கு உத்தர விடவேண்டும்” என்று கோரி யிருந்தார்.‘யோகா மதச்சார்பற்றது’ என அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள ஒரு நீதிமன்றம் கூறியிருப்பதையும் அஸ்வினி குமார் தனது மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவை விசார ணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கள், இதனை வரும் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி