Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 11, 2016

பிளஸ் 1, பிளஸ் டூ வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் ரெடி.. ஜெ. அனுமதித்ததும் அமல்: அமைச்சர் தகவல்.

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதியபாடத்திட்டம் தயாராக உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதியப் பாடத் திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்றப் பின் அமலுக்கு வரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை மாற்றுவது என்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் கடந்து இன்னும் புதியப் பாடத்திட்டத்தை தமிழக அரசு அமல் படுத்தாமல் இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் நன்றாக இருந்தாலும், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத நிலையே நீடிக்கிறது. அந்த அளவிற்கு நமது பள்ளிக் கல்வியின் பாடத் திட்டங்கள் தரம் குறைவானதாக உள்ளன என்று ஏற்கனவே கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய பாடத்திட்டத்தை பொருத்தவரை, ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இருப்பதில் இருந்து இன்னும் கொஞ்சம் மேன்மைபடுத்தி கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது சிறப்பாக இருக்கும் என்றும் பாண்டியராஜன் கூறினார்.

1 comment :

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி