Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 2, 2016

போஸ்ட்மேன் வேலை நவ., 15 கடைசி'

'தமிழகத்தில், காலியாக உள்ள, 310 போஸ்ட்மேன்கள், மெயில் கார்டு பணி இடங்களுக்கு, நவ., 15க்குள், விண்ணப்பிக்கலாம்' என, அஞ்சல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அஞ்சல் வட்டத்தில், 304 போஸ்ட் மேன்கள்; ஆறு மெயில் கார்டுகள் என, காலியாக உள்ள, 310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, பிளஸ் 2 முடித்தோர், ஆன்லைன் வழியே, நவ., 15க்குள் விண்ணப்பிக்கலாம். 21 ஆயிரம் ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

பொது பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும், அரசாணைகளின்படி, வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.வயது வரம்பு, 2016, நவ., 15ஐ அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். விண்ணப்பங்கள் பெறவும், மேலும் விபரங்களுக்கும், www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி