Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 19, 2016

குரூப் - 1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வு மற்றும் தபால் துறை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர், சுப்பையன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 85 காலிப் பணியிடங்களை நிரப்ப, குரூப் - 1 முதன்மை தேர்வை, பிப்., 19ல் நடத்த உள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், துவக்கப்பட உள்ளது. இதில், பாடவாரியான வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்; பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.

எனவே, தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், தங்களின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். அதேபோல், தபால் துறையில், 5,014 காலியிடங்களை நிரப்ப, மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு, 2017 ஜன., 7 முதல் பிப்., 5 வரை நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகளும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், துவக்கப்பட

உள்ளன.இவ்வாறு சுப்பையன் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி