Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 5, 2016

2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு: அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் தொடங்குகிறது.

2-ஆம் ஆண்டு பியூசி தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்தி: 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தேர்வு நடத்தப்படும் வரைவு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் 9 முதல் 27-ஆம் தேதி வரை தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வு அட்டவணை குறித்து பொதுமக்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அதுகுறித்து இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் பியூ கல்வித் துறைக்கு முறையாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்களின் கருத்தறிந்த பிறகு, பொதுத் தேர்வுக்கான இறுதி கால அட்டவணை அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும்.

பொதுமக்களின் பார்வைக்காக www.pue.kar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வு தேதியும், பாடமும் வருமாறு:
2017, மார்ச் 9 (வியாழன்)-உயிரியல், வரலாறு, மார்ச் 10 (வெள்ளி)-மின்னணுவியல், கணினி அறிவியல், மார்ச் 11 (சனி)-கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மார்ச் 13 (திங்கள்)-சமூகவியல், கணக்குப் பதிவியல், மார்ச் 14(செவ்வாய்)-கணிதம், மார்ச் 15 (புதன்)-கல்வி, தருக்கவியல், மார்ச் 16 (வியாழன்)-பொருளாதாரம், நில அமைப்பியல், மார்ச் 17 (வெள்ளி)-இயற்பியல், மனநலவியல், மார்ச் 18(சனி)-சம்ஸ்கிருதம், மராத்தி, உருது, பிரெஞ்ச், மார்ச் 20(திங்கள்)-வேதியியல், வணிக ஆய்வு, மார்ச் 21(செவ்வாய்)-அரசியல் அறிவியல், அடிப்படை கணிதம், மார்ச் 22 (புதன்)-ஹிந்தி, தெலுங்கு, மார்ச் 23 (வியாழன்)-கன்னடம், தமிழ், மலையாளம், அராபிக், மார்ச் 24 (வெள்ளி)-சிறப்பு கன்னடம், மனை அறிவியல், மார்ச் 25 (சனி)-புள்ளியியல், புவியியல், மார்ச் 26 (ஞாயிறு)-விடுமுறை, மார்ச் 27 (திங்கள்)- ஆங்கிலம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி