Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 6, 2016

இன்று குரூப் 4 தேர்வு: 15 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 15 லட்சம் பேர் எழுதும் குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர், வரைவாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தொகுதியின் கீழ் வருகின்றன.
இதன்படி, 5,451 காலியிடங்களுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வுக் கூடங்களில் தேர்வு நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சியே தேர்வு எழுதப் போதும் என்பதால், 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு எழுதுவோருக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இல்லாவிட்டால் அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லிடப் பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் விண்ணப்பதாரர் தேர்வுக்கூடத்திற்குள் எடுத்துவரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறப்புப் பேருந்துகள்: தேர்வையொட்டி, தேர்வுக் கூடங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் விடப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி