Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 3, 2016

சித்தா படிப்பு: 5ல் கலந்தாய்வு : 4 மாத இழுத்தடிப்புக்கு தீர்வு.

நான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும், 5ல் துவங்குகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை உட்பட ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 460 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன; இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பித்து நான்கு மாதங்களாகியும், கலந்தாய்வை நடத்தாததால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தனியார்கல்லுாரி இடங்கள் நிரம்ப, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம், மறைமுக ஆதரவு தருகிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பினர். ஆனால், மாணவர் சேர்க்கைக்கு, 'ஆயுஷ்' கவுன்சில் அனுமதி தருவதில் ஏற்படும் தாமதத்தால், கலந்தாய்வு தள்ளிப் போவதாக, அதிகாரிகள் சமாளித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தரவரிசை பட்டியல் வெளியானது. தற்போது, 'முதற்கட்ட கலந்தாய்வு, நவ., 5ல் துவங்கி, 7 வரை நடக்கும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், நான்கு மாதங்கள் இழுத்தடிப்புக்கு தீர்வு கிடைத்து உள்ளது.கலந்தாய்வு விபரம்கலந்தாய்வு, நவ., 5ல், துவங்குகிறது. 199 முதல், 187.50 வரை, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 740 பேர், அன்றைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்

நவ., 6ல், 187.25 முதல், 178.00 வரை, 'கட் - ஆப்' பெற்ற, 1,016 பேர்; நவ., 7ல், 177.25 முதல், 165.50 வரை, 'கட் - ஆப்' பெற்ற, 1,074 பேர் என, முதற்கட்ட கலந்தாய்விற்கு, 2,830 பேர்அழைக்கப்பட்டு உள்ளனர்

இதில், இடங்கள் நிரம்பாவிட்டால், அடுத்தகட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இட ஒதுக்கீடு பெறுவோர், நவ., 11க்குள், கல்லுாரியில் சேர வேண்டும். மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி