Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 19, 2016

முதல்வர் ஜெ., இன்று மாலை 5 மணிக்கு வீடு திரும்புகிறார்?இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை 5 மணிக்கு, ‛டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, செப்.,22ம் தேதி இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம், லண்டன், சிங்கப்பூர் டாக்டர்கள் அடங்கிய குழு அளித்த தீவிர சிகிச்சையால் அவர் உடல் நலம் நன்கு தேறியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி நேற்று அளித்த பேட்டியின் போது, ‛முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்றுள்ளார். வழக்கமான உணவுகளை எடுத்து வருகிறார். அவ்வப்போது தான் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் நலம் பெற இன்னும் 7 வாரங்களாகும்' என, தெரிவித்து இருந்தார்.இதையடுத்து அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை 5 மணிக்கு மருத்துவமனையில் இருந்து, ‛டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு, வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

5 comments :

  1. மதிப்பிற்கும் மரியாதைகுரிய
    மாண்புமிகு புரட்சி தலைவி தமிழக முதல்வர் அம்மா இறைவனின் அருளாள் பூரணம் குணமடைந்து வீடு திரும்பும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் என்றும் நலமுடன் வாழ வேண்டுமாய் வாழ்த்த வயது இல்லை அதனால் எல்லாம் வல்லமை கொண்ட இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.,

    ஓம் நம சிவாயா போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர்களே .உங்கள் அனைவருக்கும்.இந்த ஆன்லைன் வேலைகளை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ..வீட்டில் இருந்து கொண்டே மாதம் 15000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம் .

      1.ONLINE DATA ENTRY.
      2.ADS POSTING
      3. LIKE SHARE & COMMENT

      நீங்கள் 24 மணி நேரத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் வாரம் ஒருமுறை சம்பளம் பெற்றுக்கொள்ளலாம் .

      நன்றி வாழ்க வளர்க Contact 9524847173 email id md.riyal097@gmail.com

      Delete
  2. Wrong News admin..

    சாதாரண வார்டுக்கு தான் மாற்றப்படுகிறார்.

    ReplyDelete
  3. Veedu thirumbiya vudan Trb callfor pannunga amma please

    ReplyDelete
  4. தவறானத்தகவல்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி