Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 8, 2016

65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து வழங்க இலக்கு.

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறைஉயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த முகாம் திங்கள்கிழமை (நவ.7) தொடங்கியது. மேலும், இந்த முகாம் வரும் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறியது:

குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் மற்றும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின் ஏ திரவம் விளங்குகிறது. இந்த திரவம் வழங்குவதால் கண் பார்வைக் குறைபாடு முற்றிலும் தடுக்கப்படுகிறது.மேலும், கல்லீரலில் உள்ள வைட்டமின் ஏ சத்து, குழந்தை பிறந்த 4 மாதங்களில் குறைய ஆரம்பித்து, 6 மாதங்களில் மிகவும் குறைந்துவிடும். இதைத் தவிர்க்கும் நோக்கத்தில் 6 மாத குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை வைட்டமின் -ஏ திரவம் வழங்கப்பட்டு வருகிறது.

6 நாள்கள்:

 இந்த முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். இந்த முகாம்களில் வரும் 12-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல், மாலை 3 மணி வரை 6 நாள்களுக்கு வைட்டமின் ஏ திரவம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி