Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 21, 2016

8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலையரசி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஜனவரி 2017-இல் நடைபெறவுள்ள 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 1.1.2017 அன்று பனிரெண்டரை வயது நிறைவடைந்த தனித்தேர்வர்கள் எழுதலாம். இந்த தேர்வுக்கு நவ.25-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் www.dge.tn.giv.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ ரொக்கமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.

 விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம் எனத் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி