Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 7, 2016

மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டதற்கு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அரசு ஊழியர்களின் 9 மாதபேறுகால விடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.
அதில் பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரிகரிக்கப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளது.  முன்னதாக கடந் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்துவதாக தெரிவித்திருந்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த ஜெயலலிதா மருத்துவ துறையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டார். குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழகம் சாதனை படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, தமிழக அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புகளில் முக்கியமானது. மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக உயர்த்தும் சட்டதிருத்தம் மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி