Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 12, 2016

அரசு பள்ளிகளுக்கு வர்த்தக பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிப்பதா?- உயர் நீதிமன்றம் கண்டனம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாநில அரசு சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறை இருந்தால் அது பயன்பாட்டில் இல்லை. மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளை பூட்டி வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகி ன்றனர்.

அரசு பள்ளிகளில்கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்கு மத்திய அரசு 60 சதவீத நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்காவிட்டால் எந்தப் பணியும் நடைபெறாது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதாவது செய்தால் அரசை பாராட்டலாம். எதுவும் செய்யாமல் இருந்தால் எப்படி பாராட்டுவது?துப்புரவுப் பணியாளர்களைப் பெற்றோர்-ஆசிரியர்கள் கழகம் நியமனம் செய்கின்றனர் என அரசு சொல்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.750 முதல் ரூ.1500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்திற்கு இந்த காலத்தில் யார் வேலைக்கு வருவர்.மின்சார கட்டணம் செலுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1500வழங்குவதாக அரசு கூறுகிறது.

கட்டணம் அதிகமாக வந்தால் தலைமை ஆசிரியர் சரி செய்து கொள்வார் என்கின்றனர். தலைமை ஆசிரியர் பணத்துக்கு எங்கு போவார். ஒவ்வொரு பள்ளிக்கும் இரு மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வருகிறது. அரசு பள்ளிகளுக்கு வர்த்தகப் பிரிவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பள்ளி என்ன தொழிற்சாலையா? பள்ளிகளுக்கு வீட்டுக்கான மின் கட்டணம் நிர்ணயம் செய்தால் என்ன ஆகி விடும்.வழக்கறிஞர்கள் குழு பள்ளிக ளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி நாப்கின் வழங்கும் இயந்திரம் செயல்படவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பதில் மனுவில் நாப்கின் இயந்திரம் செயல்படுகிறது எனக் கூறப் பட்டுள்ளது. இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றனர்.

அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, பள்ளிகளில் படிப்படியாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நாப்கின் இயந் திரத்தை பயன்படுத்த மாண விகள் தயங்குகின்றனர்.இதனால் அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து குறைபாடுகளும் களையப்பட வேண்டும் என்றனர். பின்னர் விசாரணையை நவ.18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

3 comments :

  1. intha arasankam kalvikaka othukapadum panathai laptop cycle pontra thevaiyatra 20 kum athikamana selau seiuthu gvt schoola nasam paduthuthu

    ReplyDelete
  2. புத்தகம், நோட்டு புத்தகப்பை, வண்ண பென்சில்கள், செஸ் போர்டுகள், பேருந்து பயண அட்டை,சைக்கிள்,மடிக்கணினி,சீருடை,காலணி, இவற்றையெல்லாம் வாங்கித்தர வேண்டியது பெற்றோரின் கடமை. இதை விலையில்லாமல் தருகிறோம் என்று நம் வரிப்பணத்தில் கொடுத்து விட்டு,பள்ளி செயல்படத் தேவையான வகுப்பறைகள், சுகாதாரமான கழிப்பறைகள், வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாதுகாப்பிற்கு மதில் சுவர்கள், காவலாளி, கழிப்பறை சுத்தம் செய்ய தொழிலாளி ஆகியவற்றிற்கு செலவு செய்யாமல் அரசுப்பள்ளிகள் எங்கனம் வளர்ச்சி அடையும்/ மாணவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்துகொண்டே சென்று 10 ஆண்டு கழித்து மாநிலத்தில் அரசுபள்ளிகளே இல்லை என்ற நிலை வரும் வாய்ப்பு மிக அதிகம்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி