Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 25, 2016

யுஜிசி ‘நெட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை பல்கலை. ஏற்பாடு

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் நடத்தப் படும் ‘நெட்’ தகுதித் தேர்வுக்கு சென்னை பல்கலைக்கழகம் இலவச பயிற்சி அளிக்க இருக்கிறது.
பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மையம் மூலமாக அளிக்கப்படும் இந்த பயிற்சியில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

இதற்கான வகுப்புகள் முதல் தாளுக்கு டிசம்பர் 10-ம் தேதிமுதல் 24-ம் தேதி வரையிலும் (சனி, ஞாயிறு), 2, 3-ம் தாள்களுக்கு டிசம்பர் 19 முதல் 30-ம் தேதி வரை யும் நடைபெறும். பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மையத்தில் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 7-ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-25399518 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மைய இயக்குநர் (பொறுப்பு) எம்.சக்திவேல் அறிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி