Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 12, 2016

'இல்லந்தோறும் இணையம்' விண்ணப்பிக்க அவகாசம்

'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், மார்ச், 1 முதல், மாவட்ட தலைநகரங்களில், அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இரண்டாம் கட்டமாக, அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும், திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளது. இதில் சேர்ந்து, இணைய சேவை வழங்க விரும்புவோர், நிறுவனத்தின் இணைய தளத்தில் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்; வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இதுவரை, 7,317 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பலர், கால அவகாசத்தை நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும்,www.tactv.inஎன்ற இணையதளத்தில், 14ம்தேதி முதல் தெரிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், 1800 425 2911 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி