Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Nov 22, 2016

திருமணத்திற்கு பணம் எடுக்கும் வழிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியீடு.

திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரைபணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், திருமண செலவிற்கு மட்டும் ரூ.2.5 லட்சம் வரை ஒரே தடவையாக எடுக்கலாம் என அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:

நவ.,8 ம் தேதிக்கு முன் வங்கியில் டிபாசிட் செய்த பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.டிச.,30 க்குள் நடக்கும் திருமணத்திற்கு மட்டுமே ரூ.2.5 லட்சம் வரை வங்கியிலிருந்து எடுக்க முடியும்.பெற்றோர் அல்லது மணமக்களில் ஒருவருக்கு மட்டுமே ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.ரூ.2.5 லட்சம் எடுக்க தனி விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.திருமண அழைப்பிதழ், முன்பண செலவு ரசீது விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி கொள்ளலாம்.வங்கி கணக்கு உள்ளவர்கள் அவர்கள் கணக்கில் டிபாசிட் செய்து பின்னர் எடுத்து கொள்ள வேண்டும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி